வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை! - போக்சோ சட்டத்தில் பாதிரியார் கைது!
வெள்ளி 29 ஜூன் 2018 15:31:12

img

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மெத்தடிஸ் பள்ளியில் தாளாளராக இருப்பவர் பாதிரியார் குணஜோதி மணி. அதே பகுதியில் சி.எஸ்.ஐ. திருச்சபை யின் பாதிரியராகவும் இருக்கிறார். இவர் அந்த பள்ளி ஹாஸ்டலில் தங்கி இருந்து ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவியின் தாய் பத்மாவதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் இன்ஸ் சித்ரா தலைமையில் பாதிரியார் குணஜோதி மணி மீது பாலியல் வன்கொடுமையில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் கடந்த 16-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், பாதிரியார் குணஜோதி மணி தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை ஜூன் 26ந் தேதி வரை போலீசார் பாதிரியார் ஜோதி குணமணியை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த மாதிரியான பள்ளி மாணவிகளின் பாலியில் தொந்தரவு புகாருக்கு முன்ஜாமீன் கொடுக்க முடியாது என்றும் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள சொல்லி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின்படி குணஜோதிமணி திருச்சி இரண்டாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் திடீர் என சரணடைந்தார். அவரை வருகிற 12-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி என்.குணசேகரன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பாதிரியார் குணஜோதி மணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி கோர்ட்டில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில் பாதிரியார் குணஜோதிமணி என்னை போலவே பல மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறி இருப்பதாக தெரிகிறது. எனவே இதுபற்றி முழு அளவில் விசாரிப்ப தற்காக அனைத்து மகளிர் போலீசார் குணஜோதி மணியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். போலீஸ் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img