img
img

விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சலை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை
புதன் 27 ஜூன் 2018 12:43:47

img

வாஷிங்டன்:

விமானங்கள் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சலை 70 சதவிகிதம் குறைந்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். விமானங்கள் இயக்க ப்படும் போது அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்தில் இருந்து வரும் ஒலியை நிலத்தில் இருந்தே கேட்கும் அளவிற்கு அதன் இறைச்சல் இருக்கும்.

இதையடுத்து விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தத்தினால் அதிக அளவில் பாதிப்படைகின்றனர். மேலும் விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில், விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியைக் குறைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. 

பல்வேறு சோதனைகளுக்குப் பின் தற்போது அந்த சோதனையில் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டியுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாசாவின் சோதனை விமானங்களில் நடத்தப்பட்ட பல்வேறு மாற்றங்களுக்குப் பின் அவை இயக்கப்பட்டபோது இரைச்சல் ஒலி 70 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், இதற்காக விமான அமைப்பில் மூன்று தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த அளவுக்கு விமானத்தின் இரைச்சல் குறைக்கப்படுவது விமான நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இறைச்சல் ஏற்படாதவாறு இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
வடகொரியாவில் அடுத்த வாரம்  புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்

மேலும்
img
உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு  சீனா வெற்றிகர சோதனை!

8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்

மேலும்
img
மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது

இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்

மேலும்
img
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை

மேலும்
img
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img