புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

ஒரே நிமிடத்தில் சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரி: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
ஒரே நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும் செல்போன் பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் ஸ்பான் போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஒரு நிமிடத்தில் சார்ஜ் ஆகும் புதிய ரக பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர். தற்போது செல்போன்களில் பயன்பாடடில் இருப்பது லித்தியம் மற்றும் அல்காலின் பேட்டரிகள். இந்த வகை பேட்டரிகளுக்குப் பதிலாக அலுமினியம் பேட்டரியை அமெரிக்க விஞ்ஞானிகள் புதிதாக வடிவமைத்துள்ளனர். இதில் அதிவிரைவாக சார்ஜ் செய்ய முடியும். அத்துடன் இதில் தீப்பிடிப்பது போன்ற அபாயம் இருக்காது. இந்த அலுமினியம் பேட்டரி மற்ற பேட்டரிகளை போல சுற்றுச்சூழலையும் கெடுக்காது. இந்த வகை பேட்டரிகளை செல்போன் மட்டுமின்றி லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களில் பயன்படுத்தலாம் என்று அந்த விஞ்ஞானிகள் குழு தலைவர் ஹாங்கி டாஸ் தெரிவித்துள்ளார். இனி விரைவாகவும் பாதுகாப்பாகவும் செல்போன்களுக்கு சார்ஜ்செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்செல்

வர்த்தகம்

img
முற்றிலும் இலவசமான அழகு சாதன பயிற்சி 

குறைந்தது 3,500 ரிங்கிடிலிருந்து 20,000 ரிங்கிட்

மேலும்
img
ரான்சம்வேரை விட சக்திவாய்ந்த இணைய வைரஸ் உலகம் முழுவதும் பரவுகிறது

வைரஸிலிருந்து கணினியை விடுவிக்க பிணைத் தொகை செலுத்த வேண்டும்

மேலும்
img
இசூசு நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

இசூசு மலேசியா செண்டிரியான் பெர்ஹாட்...

மேலும்
img
மொபைல் ஆப்களைப் பயன்படுத்தும் முன்பு இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!

நாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில்...

மேலும்
img
பல மில்லியன் கணக்கான கணக்குகள் Hack செய்யப்பட்டது:

உறுதிப்படுத்தியது YAHOO!

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img