சனி 16, பிப்ரவரி 2019  
img
img

தென்கொரியாவுடன் மீண்டும் போர்ப்பயிற்சி? - கிம்முக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
திங்கள் 18 ஜூன் 2018 11:54:43

img

தென் கொரியாவுடன் மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுபடக் கூடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் இடையேயான சந்திப்பு, மலேசியாவில் கடந்த ஜூன் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது ட்ரம்ப் மற்றும் கிம் தனிப்பட்ட முறையிலும், பின்னர் உயர்மட்டக் குழுவினருடனும் சேர்ந்து பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர்.

அப்போது அணுஆயுத ஒழிப்பு குறித்த ஒப்பந்தத்தை வடகொரிய அதிபரும், தென்கொரியாவில் போர்ப்பயிற்சியை நிறுத்திக் கொள்வது குறித்து அமெரிக்க அதிபரும் அறிவிப்பை வெளியிட்டனர். இதனால், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வடகொரியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் பட்சத்தில், தென்கொரியாவில் மீண்டும் போர்ப்பயிற்சியில் ஈடுப டுவோம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வடகொரிய அதிபருடனான சந்திப்பில் தென்கொரியாவில் போர்ப்பயிற்சி நிறுத்தம் குறித்த யோசனையை நான்தான் முன்வைத்தேன்.

தென்கொரியாவில் போர்ப்பயிற்சியில் ஈடுபடுவதால், எங்களுக்கு அதிக செலவு ஆகிறது. அதுமட்டுமின்றி, நல்லெண்ணத்துடன் நடக்கும் பேச்சு வார்த்தையின் மீது அது சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. அதனால் மட்டுமே போர்ப்பயிற்சி நிறுத்தம் குறித்து பேசினேன். ஒருவேளை வடகொரியா வுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடையும் பட்சத்தில் உடனடியாக தென்கொரியாவில் போர்ப்பயிற்சியை தொடங்குவோம்’ என எச்சரிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
img
நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 5 பேர் பலி 

கிழக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நிலக்கரி

மேலும்
img
மின் சிகரெட் வெடித்து ஆடவர் பலி 

சிகிச்சை பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம்

மேலும்
img
ஐ.எஸ் பயங்கரவாதிகள்  தோற்கடிக்கப்படுவார்கள் 

கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்

மேலும்
img
இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை  அறைந்த  பெண்ணுக்கு சிறை 

தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டாலர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img