செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

வயதான பெண்மணி தாக்கப்பட்ட சம்பவம்!
வெள்ளி 07 அக்டோபர் 2016 13:48:04

img

கெலேபாங்கில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தை மூடுமாறு மலாக்கா அரசு பணித்துள்ளது. அந்த இல்லத்தின் பராமரிப்பாளர், ஒரு மூதாட்டியை அடிப்பதைக் காண்பிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐந்து நாளில் அந்த இல்லத்தை மூடிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாக மாநில மகளிர், குடும்ப மேம்பாட்டுக் குழுத் தலைவர் லத்திபா ஒமார் கூறினார். காணொளி மட்டுமல்லாமல் அது ஒரு பதிவு செய்யப்படாத இல்லம் என்பதும் அது மூடப்படுவதற்கான காரணமாகும் என்று லத்திபா சொன்னார். மலாக்காவில் 73 பதிவு செய்யப்பட்ட பராமரிப்பு இல்லங்கள் உள்ளன. 20க்கும் குறைவானவை இன்னும் சமுக நலத்துறையில் பதிந்து கொள்ளாமலிருக்கின்றன. இந்த முதியோர் இல்லத்துக்கு 2015 ஆம ஆண்டிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், அது இன்னும் அதைச் செய்யாமலிருக்கிறது என்றார். 10 விநாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில் வயதான மூதாட்டி ஒருவர், அந்த முதியோர் இல்லத்தை நடத்தி வரும் நபரால் கடுமையாக தாக்கப்படுவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த மூதாட்டி வலி தாங்க முடியாமல் கதறுவதையும் அது சித்தரிக்கிறது. இதன் தொடர்பில் மலாக்க, பத்தாங் தீகா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் முதல் தேதியிலிருந்து தாம் அந்த முதியோர் இல்லத்தில் வேலை செய்வதிலிந்து நிறுத்திக்கொண்டதாகவும் அந்த இல்லத்தை நடத்தி வருகின்ற நபரின் கொடுமை தாங்க முடியவில்லை என்றும் தன்னை மட்டுமின்றிஅந்த இல்லத்தில் தங்கியிருப்பவர்களையும் அவர் கண்மூடித்தனமாக தாக்கி வருவதாகவும் அந்த மூதாட்டி தனது போலீஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img