திங்கள் 17, ஜூன் 2019  
img
img

சபா குடிநீர் இலாகாவின் இரு மூத்த அதிகாரிகள் வீட்டில்
வியாழன் 06 அக்டோபர் 2016 17:00:43

img

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கையூட்டு பெற்று வந்ததாக நம்பப்படும் சபா குடிநீர் இலாகாவைச் சேர்ந்த இரு மூத்த அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்ததில் 11 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள கட்டுக் கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வரலாற்றில் அரசாங்க சார்பு நிறுவனத்தைச் சேர்ந்த இரு மூத்த அதிகாரிகளிடமிருந்து மிகப் பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். அந்த தொகையில், வெ.4 கோடியே 50 லட்சம் ஓர் இயக்குநரிடமிருந்தும், வெ.72 லட்சம் ஒரு துணை இயக்குநரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக எம்.ஏ.சி.சி. துணைத் தலைமை ஆணையர் டத்தோ அஸாம் பாக்கி கூறினார். அரசாங்க ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவாகும். கடந்த காலங்களில் நாங்கள் கைப்பற்றிய பெரிய தொகை என்றால் அது ஒரு கோடி வெள்ளியாகும். சபாவில் மேற்கொண்ட நடவடிக்கையில், எம்.ஏ.சி.சி. அந்த அதிகாரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டது. அந்த அதிகாரிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்து 2 கோடியே 30 லட்சம் வெள்ளியையும் நாங்கள் கைப்பற்றினோம். ஆறு சேமிப்புப் பெட்டகங்களையும் பறிமுதல் செய்தோம். அவற்றில் ஒன்றில் 25 லட்சம் வெள்ளி ரொக்கம் இருந்தது. அந்த அதிகாரிகளில் ஒருவருக்கு தொடர்புடைய நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 3 கோடியே 70 லட்சம் வெள்ளியையும் எம்.ஏ.சி.சி. முடக்கி வைத்துள்ளது. இந்நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட இதர பொருள்களில், ஆடம்பரக் கார்கள், தங்க நகைகள், கைப்பைகள், 127 நிலப்பட்டாக்கள் ஆகியனவும் அடங்கும். தங்கள் இலாகாவின் கீழான குத்தகைகளை தங்கள் உறவினர்களுக்கு வழங்கி வந்ததான சந்தேகத்தின் பேரில் 51, 54 வயதுக்கு உட்பட்ட அந்த இரு அதிகாரிகளும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர். அந்த இரண்டு அதிகாரிகளுமே கடந்த 2010-ஆம் ஆண்டு தொடக்கம் மொத்தம் 330 கோடி வெள்ளி மதிப்புள்ள குத்தகைகளை கையாண்டு வந்துள்ளனர் என்று அஸாம் குறிப்பிட்டார். நேற்று இங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், எம்.ஏ.சி.சி. அதிகாரிகள் கைப்பற்றிய பொருள்கள், ரொக்கம் அனைத்தும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்நிய நாணயம், விலையுயர்ந்த கைகடிகாரங்கள் ஆகியனவும் அவற்றுள் அடங்கும். இவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த துணை இயக்குநரின் 55 வயது சகோதரரையும் (தொழில் அதிபர், டத்தோ அந்தஸ்து உடையவர்), மற்றொருவரின் 50 வயது சகோதரரையும் (கணக்காய்வாளர்) போலீசார் கைது செய்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆபாசக் காணொளி விசாரணை. எம்சிஎம்சி முழுமையாக ஒத்துழைக்கும்

இந்நிலையில் அந்த ஒத்துழைப்பு எவ்வடிவிலானது

மேலும்
img
ஓரின உறவு ஆபாசக் காணொளி விவகாரம். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்

தனக்கும் பங்குள்ளது என்பதை பகிரங்கமாக

மேலும்
img
நாட்டில் சாக்கடை அரசியல் நீடித்தால், அடுத்து நான்கூட பாதிப்படையலாம்

அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆபாசக் காணொளிகள்

மேலும்
img
நானும் அஸ்மினும் 4 முறை ஓரின உறவில் ஈடுபட்டிருக்கிறோம்.

அந்த காணொளி பதிவுகள் ஆன்லைனில் கசிந்து

மேலும்
img
விடுமுறையில் செல்ல அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு காவலாளியாக அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள்

அண்மைய மத்திய ஆண்டு விடுமுறையின்போது சில ஆசிரியர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img