வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

மொகிதீனும் அன்வாருடன் சந்திப்பு!
வியாழன் 06 அக்டோபர் 2016 16:54:17

img

பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் (பெர்சத்து) இடைக்காலத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் பி.கே.ஆர். ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சுமார் 30 நிமிடம் சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் மொகிதீனிடம் அச்சந்திப்பு குறித்து விசாரித்த போது அன்வாருக்கு தார்மீக ஆதரவு அளிக்க வந்திருப்பதாக தெரிவித்தார். அன்வாரை தான் நீண்ட காலமாக பார்க்கவில்லை என்றும், ஆகவேதான், நீதிமன்றத்திற்கு வர தான் முடிவு செய்ததாகவும் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்) தலைவர் மொகிதீன் விவரித்தார். அவர் பிகேஆரின் ஆலோசகர். ஆகவே, தேசிய முன்னணியை எதிர்ப்பதற்கு சிறந்த ஒத்துழைப்பும் உறவும் தேவைப்படுவதால், ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் இந்த சந்திப்பு முக்கியம் என நான் கருதுகிறேன். 2013 லஹாட் டத்து ஊடுருவ லில் தனக்கும் பங்கிருப்பதாக வெளியான பத்திரிகைச் செய்தி தொடர்பாக மலாய் நாளிதழான உத்துசான் மலேசியாவின் வெளி யீட்டாளர் அதன் நிர்வாக ஆசிரியர் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கிற்கு தீர்வு காண அன்வார் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். ஒரு மாதத்திற்கு முன்னர், மற்றொரு உயர் நீதிமன்றத்திற்கு அன்வார் வந்திருந்தபோது முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அன்வாரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. சரியாக ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் மொகிதீனும் அவரை பார்க்க வந்துள்ளார். சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மன்றம் தொடர்பான சட்டத்தை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கோரியதான் செய்திருந்த விண்ணப்பம் மீதான வழக்கு விசாரணைக்காக அன்வார் அப்போது நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அன்று அன்வாரை சந்தித்து மகாதீர் கைகுலுக்கினார். இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் துணைப் பிரதமர் பதவியில் இருந்து அன்வார் விலக்கப்பட்டார். அதன் பின்னர் அன்வாரும் மகாதீரும் அன்றுதான் முதன் முறையாக சந்தித்துக் கொண்டனர். இதனிடையே, தன்னை சந்திக்க மொகிதீன் நீதிமன்றத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி என்று அன்வார் செய்தியாளர்களிடம் கூறினார். எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நாங்கள் மேம்படுத்துவோம். அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி பிகேஆரையும் பக்காத்தான் ஹராப்பான் பங்காளி கட்சிகளை யும் நான் கேட்டுக் கொள்வேன் என்று அன்வார் கூறினார். பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சாத்தியம் குறித்து வினவப்பட்டபோது, நாம் முதலில் கலந்தாலோசனை நடத்த வேண்டும் என்று அன்வார் பதிலளித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img