வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

எங்கோ வாழும் முதலாளி தேவையா? தமிழ்நாட்டு மக்கள் தேவையா?- சத்யராஜ் கேள்வி
புதன் 23 மே 2018 16:55:35

img

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான நூறாவது நாள் மக்கள் போராட்டத்தில் போலீசார் நடத்திய தடியடியினால் வன்முறை வெடித்தது. அதிகம் திரண்ட போராட்டங்கரர்களை தடுத்து நிறுத்த முடியாமல் திணறிய போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பள்ளி மாணவி உட்பட 11 பேர் இறந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து எல்லா தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்துவர, திரைப்பட நடிகர் சத்யராஜ் இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், 

''தூத்துக்குடியில் நடந்த கொடுமைக்கு எனது கண்டனத்தை பதிவுசெய்கிறேன். இறந்தவர்கள் அத்தனை பேருக்கும், அந்த குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறேன். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். ஒன்றே ஒன்றை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா? இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும், நம் தமிழ்நாட்டு மக்களும் முக்கியமா? என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இது நெஞ்சம் பதைக்க வைக்கிறது. மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. இந்தக் கொடுமைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு, இறந்தவர்களுக்கு என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இதற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் ஒருவனாக'' என்று தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்

மக்கள் பலம் எனக்கு உள்ளது என்பதால்

மேலும்
img
3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசால் 350 கிலோ வெடிமருந்தை கண்டுபிடிக்க முடியாதா-

'நரேந்திர மோடி ஜீயால் 3 கிலோ மாட்டிறைச்சியை

மேலும்
img
தமிழக அமைச்சர் வீட்டில் ரெய்டு! குழப்பத்தில் தொண்டர்கள்!

120 பேர் ஓரே நேரத்தில் ரெய்டில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும்
img
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் உடலுக்கு முன் சிரித்தாரா யோகி..?

யோகிக்கு எதிராக கண்டனங்கள்

மேலும்
img
புல்வாமா தாக்குதல் அன்று பிஸி ஷூட்டிங்கில் இருந்த பிரதமர்’ - ஆதாரத்தைக் காட்டும் காங்கிரஸ்

உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img