திங்கள் 24, ஜூன் 2019  
img
img

பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல்.
புதன் 05 அக்டோபர் 2016 13:29:15

img

இந்திய நிலைகள் மீது நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாக். பயங்கரவாதிகள் மீண்டும் பாதுகாப்புப் படையினர் முகாம் மீது தாக்குதல் நடத்தியதால் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பாரமுல்லாவில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்புப் படை முகாம் மீது நேற்று முன்தினம் இரவு பாக். ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் மனிஷ் மேத்தா தெரிவித்தார். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இறுதியில், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; சிலர் தப்பியோடி விட்டனர். இந்த சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் காயமடைந்தார். எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே, நிலவி வரும் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ’இரு நாடுகளிடையே நிலவும் பதற்றத்தை தணிக்க இருதரப்பும் ஒத்துழைப்பது’ என முடிவுசெய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா பாதுகாப்புப் படை முகாம் மீது பாக். பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்திய சம்பவத்தில் குழப்பம் நீடித்து வருகிறது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. எனினும் அதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உறுதியான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அங்கு ஒரு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டதால் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக நினைத்து வீரர்கள் தாக்குதல் நடத்தினர். சரமாரி துப்பாக்கிச் சூட்டிற்கு பின், அங்கு பயங்கரவாதிகள் யாரும் இல்லை என்றும் தகவல் வெளியானது. அவர்கள் தப்பி விட்டனரா அல்லது தவறாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ராஜாமணிக்கு பதில் யார்? தகுதியானவரைத் தேடுகிறது ஆஸ்ட்ரோ.

இதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

ஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை

மேலும்
img
உலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி. 

உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள

மேலும்
img
மணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார் 

சிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்

மேலும்
img
அஸ்மினும் நானும் 2016-இல்தான் அன்னியோன்யமானோம்

2013ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img