புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

ஆப்கானிஸ்தானில் 5 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை: தலீபான்கள் அட்டூழியம்
செவ்வாய் 08 மே 2018 15:54:21

img
காபூல்,
 
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய தலீபான் பயங்கரவாதிகள், போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்கு தல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
 
இந்நிலையில் கந்தகார் மாகாணத்தில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மரோப் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசாரின் வாகனங்களை குறிவைத்து சரமாரியாக துப்பா க்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனடியாக பதில் தாக்குதலை தொடுத்தனர்.
 
இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸ் அதிகாரிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிர் இழந்தனர். மேலும் 9 போலீசார் படுகாயம் அடைந்தனர்.அதே சமயம் பயங்கரவாதிகள் தரப்பில் 15 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
பின்செல்

உலகச் செய்திகள்

img
மூன்று மாத குழந்தைக்கு அடையாள அட்டை வழங்கி அனுமதித்த ஐநா...

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ

மேலும்
img
கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாடு - ட்ரம்ப்பின் அடுத்த செக்!

அந்நாட்டில் குடியேறி புதிதாக கிரீன் கார்டு

மேலும்
img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img