சனி 16, பிப்ரவரி 2019  
img
img

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் முருகன், கருப்பசாமிக்கு மே. 14 வரை நீதிமன்ற காவல்
திங்கள் 30 ஏப்ரல் 2018 12:19:47

img
விருதுநகர், 
 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து பேராசிரியை நிர்மலாதேவி செல்போனில் பேசிய ஆடியோ பதிவு சமூகவலைதளங்கள் மூலம் தமிழகம் முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னரே போலீசார் இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் பெற்று நிர்மலாதேவியை கைது செய்தனர்.
 
தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றிய நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணை குழுவை அமைத்தார்.இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பேராசிரியை நிர்மலாதேவியை யும், அவர் தன்னை செல்போனில் பேசத்தூண்டியதாக சுட்டிக்காட்டிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகி யோரையும் கைது செய்தனர். 
 
மூவரையும் போலீஸ் காவலில் எடுத்தும் விசாரித்தனர்.இன்று (திங்கட்கிழமை) போலீஸ் காவல் முடிந்து முருகனும், கருப்பசாமியும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  கருப்பசாமி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் மே 14 வரை நீதிமன்ற காவலில் வைக்க  ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
img
திமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...

வரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர

மேலும்
img
நம்மக்கிட்ட கூட்டணி கட்சியா? அதான் மக்களுக்கே தெரிஞ்சிப்போச்சே

முதல் கட்டமாக நாமும் ஒரு குழு அமைத்து வேலையை தொடங்கியதாக

மேலும்
img
உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான அம்பானி

அந்த வழக்கில் 2018 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆர். காம் நிறுவனம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img