ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

கர்நாடகாவை மிரட்ட 30 ரூபாய் கேசட் போதும்!’ - வீரப்பன் மனைவி முத்துலட்சுமி
வெள்ளி 27 ஏப்ரல் 2018 16:20:06

img

என் கணவர் வீரப்பன் உயிருடன்  இருந்தவரை கர்நாடக அரசு தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுத்து வந்தது. இதனால் தமிழக விவசாயிகள் நலமுடன் இருந்தனர். ரூ.30 மதிப்புள்ள கேசட் ஒன்றை கர்நாடக அரசுக்கு என் கணவர் அனுப்பி வைத்தால் அதை மதித்து, என் கணவருக்குப் பயந்துகொண்டு அந்தக் கேசட்டில் உள்ள அனைத்து கோரிக்கைகளையும்  நிறைவேற்றித் தந்தது கர்நாடக அரசு என்று சந்தனக் கடத்தல் வீரப்பன் மனைவியும் மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு நிறுவனருமான முத்துலட்சுமி வீரப்பன் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கல்லணையில் உறுதிமொழி ஏற்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காகத் தஞ்சை வந்த முத்துலட்சுமி வீரப்பன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசுகையில், ''என் கணவர் வீரப்பன் உயிருடன் இருந்த வரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்து வந்தது. இதனால் தமிழக விவசாயிகள் நலமுடன் இருந்தனர். தமிழக மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. ரூ.30 மதிப்புள்ள கேசட் ஒன்றை கர்நாடக அரசுக்கு என் கணவர் அனுப்பி வைத்தால், அதை மதித்து, அருக்குப் பயந்துகொண்டு அந்தக் கேசட்டில் உள்ள அனைத்து கோரிக்கைக்ளையும் கர்நாடக அரசு நிறைவேற்றித் தரும். 

ஆனால், இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தும் அதைக் கர்நாடக அரசு மதிக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக அரசு, தமிழக அரசு, மத்திய அரசு  ஆகிய 3 அரசுகளுக்கும் பொறுப்புள்ளது. கர்நாடக மாநிலத்தில் எல்லோரும் ஒன்றுகூடி தமிழகத்துக்குத் தண்ணீர்விடக் கூடாது என்று போராடுகின்றனர். ஆனால், நமது உரிமையைக் கேட்டுப் போராடினால் தமிழக அரசு பொய் வழக்கு போடுகிறது. போராட்டம் நடத்துபவர்கள்மீது தடியடி நடத்துகிறது. காவிரிநீர் கேட்டுப் போராடுபவர்கள்மீது இனி தமிழக அரசு வழக்கு பதியக் கூடாது. தடியடி நடத்தக் கூடாது. இதுவரை பதிவு செய்த எல்லா வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். 

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு சார்பில் கல்லணையிலிருந்து மக்கள் சந்திப்பு ஊர்தி பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தப் பயணம் மே மாதம் 3-ம் தேதி நெய்வேலியில் நிறைவடைகிறது. வரும் 3-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லையென்றால் நெய்வேலி மின் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும். 

தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு ஏன் இங்கிருந்து மின்சாரம் வழங்க வேண்டும். அதைத் தடுத்து நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் எம்.எல்.ஏ-க்கள், பல முக்கிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி

மேலும்
img
ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்

மேலும்
img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img