வியாழன் 21, பிப்ரவரி 2019  
img
img

சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை
வியாழன் 26 ஏப்ரல் 2018 15:52:58

img
கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் மூலம் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறார். 
 
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலெட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 
 
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இதில் மிஸ்டர். சந்திரமௌலி என்ற பாடலை நடிகர் சிவக்குமாரின் மகளும், சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவக்குமார் பாடியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
சீதக்காதி  விமர்சனம்

சினிமாவுக்கு இலக்கணம் தேவையில்லை

மேலும்
img
கனா விமர்சனம்

கனா ஒவ்வொரு இந்தியனின் தூக்கத்திலும்

மேலும்
img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img