செவ்வாய் 18, செப்டம்பர் 2018  
img
img

இறந்தவருக்கு இப்படி ஒரு சோதனையா? கண் விழித்துவிட்டு மறுபடியும் இறப்பு
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
இறந்ததாக கருதப்பட்டு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தவர் திடீரென கண் திறந்தார். பிறகு சில மணி நேரத்தில் இறத்துவிட்டார். புதுவையை அடுத்த வேல்ராம்பட்டு அலங்காபுரி நகரை சேர்ந்தவர் பாரி (54). இவர் தனியார் எண்ணெய் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். ஆனாலும், சரிவர குணமாகாததால், அவரை குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று காலை திடீரென பாரி எந்த அசைவுமின்றி கிடந்துள்ளார். இதனால் அவர் இறந்து விட்டதாக கருதிய குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். பின்னர் இறுதி சடங்கிற்கான வேலைகளில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பெட்டிக்குள் வைத்த அரை மணி நேரத்திற்கு பிறகு பாரியின் கை, கால்கள் அசைந்துள்ளன. மேலும், கண்களையும் திறந்து பார்த்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பாரி இறந்து விட்டார். பிறகு அவரை, இறந்தவருக்கு செய்யும் சடங்குகளுடன் அடக்கம் செய்தனர்.
பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img