ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

முன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்-ஷின் மனைவி காலமானார்..!
வியாழன் 19 ஏப்ரல் 2018 12:59:35

img

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ்-ஷின் மனைவி பார்பரா புஷ் காலமானர்.

அமெரிக்காவின் 41-வது அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்-ஷின் மனைவியும், 43-வது அதிபர் ஜார்ஜ் புஷ்-ஷின் தாயுமான பார்பரா புஷ், உடல் நலக்குறைவால் தனது 92-வது வயதில் காலமானார். நியூயார்க் நகரத்தில், 1925 ஜூன் 8-ம் தேதி பார்பரா பியர்ஸாக புஷ் பிறந்தார். அவர் 1945-ம் ஆண்டில், ஜார்ஜ் புஷ்-ஷை திருமணம் செய்து கொண்டார். 1989 முதல் 1993 வரை அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்துள்ளார். மேலும் இவர் அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்தபோது, ​​உலகளாவிய கல்வியறிவு செயல்களை முன்னெடுக்க ஒரு அறக்கட்டளையும் நிறுவியுள்ளார்.

பார்பரா புஷ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். இந்தத் தகவலை புஷ் குடும்பத்தின் செய்தித் தொடர்பா ளர் ஜிம் மெக்ராத் உறுதிப்படுத்தியுள்ளார். பார்பராவின் இறுதிச் சடங்குகள்குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரி வித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, ஜிம் மெக்ராத் தனது டிவிட்டர் பக்கத்தில் பார்பராவின் உடல் நிலைகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'பார்பரா புஷ் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையை விரும்பவில்லை. தற்போது அவருக்கு குடும்பத்தினரின் ஆறுதல் மட்டுமே தேவைப்படுகிறது. அவர் இரும்பு பெண். உடல் நிலைபற்றி அவருக்கு கவலையில்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img