img
img

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதில் தாமதம் ; அமெரிக்கா பயணம்
வியாழன் 19 ஏப்ரல் 2018 12:51:19

img
சென்னை,
 
ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. ‘2.0’ படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். எனவே இப்போது அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்ற பேச்சு எழுந்தது. இப்போது கட்சி தொடங்கும் எண்ணம் ரஜினியிடம் இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 
 
என்றாலும், மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. எனவே விரைவில் கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கையுடன் அவருடைய ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமீபத்தில் போலீசாருக்கு ஆதரவாக ரஜினி கருத்து வெளியிட்டதற்கு கடும் விமர்சனம் எழுந்தும் இதுவரை ரஜினி எந்தவித பதி லும் தெரிவிக்கவில்லை. கட்சி பெயரை அறிவிப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் நடை பெறவில்லை. 
 
அரசியல் சூடுபிடித்துள்ள இந்த வேளையில் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று தெரி கிறது. ஒரு வார காலம் அமெரிக்காவில் ரஜினி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். இது பற்றி ரஜினியின் நெருங்கிய வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘ரஜினி ஏற்கனவே அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக செல் கிறார். வேறு காரணம் எதுவும் இல்லை’’ என்று தெரிவித்தனர். 
 
ரஜினி அமைதியாக இருந்தாலும் கட்சி தொடங்கு வதற்கான அனைத்து  ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்து விட்டார். கட்சியின் அடிப்படையை பலப்படுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சரியான நேரத்தில் கட்சியின் பெயரை அறிவிப்பார். சட்டமன்ற தேர்தலுக்கு நாள் இருக்கிறது. அதற்கு முன்பாக பெயரை அறிவித்து விட்டு மக்களை சந்திப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியுடன், நடிகர் ஆனந்தராஜ் சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img