செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

இம்சை அரசன் – 2ல் நடிக்க முடியாது - வடிவேலு கடிதம்
புதன் 18 ஏப்ரல் 2018 14:04:38

img
இம்சை அரசன் 24ம் புலிகேசி – 2ல் நடிக்க முடியாது என்று நடிகா் வடிவேலு நடிகா் சங்கத்திற்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
 
இம்சை அரசன் 24ம் புலிகேசி – 2 இயக்குநா் ஷங்கா் தயாரிப்பில் உருவாக்கப்பட இருந்தது. இந்த படத்தில் நடிகா் வடிவேலு நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு மாறாக வடிவேலு அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக தயாரிப்பாளா் சங்கத்தில் படக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து நடிகா் வடிவேலுவிடம் விளக்கம் கேட்டு நடிகா் சங்கம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
 
இந்த கடிதத்திற்கு விளக்கம் அளித்த வடிவேலு, 2016 டிசம்பா் மாதத்திற்குள் இந்த படத்திற்கான பணிகள் முடிவடைந்து விடும். அதுவரையில் வேறு படங்களில் நடிக்க வேண்டாம் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால் 2016 டிசம்பா் மாதம் வரை படத்திற்கான தொடக்கப்பணிகள் ஆரம்ப மாக வில்லை. 
 
கலைத்துறை மற்றும் நடிகா் சங்கத்தின் நலன் கருதி ஒப்பந்த காலத்திற்கு பின்னரும் அந்த படத்தில் நடித்து வந்தேன். எனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக நடிகா் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தால் எனக்கு பொருள் செலவும் மனவேதனையும் அதிகரித்துள்ளது. எனவே இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். இந்த படத்தில் நடித்தால் வேறு படங்களுக்கான பணியில் பாதிப்பு ஏற்படும்.மேலும் நடிகா் சங்கம் என்னை அழைத்து என் தரப்பு வாதங்களை கேட்காமல் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளது ஒருதலை பட்சமானது என்று அவா் தெரிவித்துள்ளார்.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
img
2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100

மேலும்
img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img