வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

வேலைப்பளு காரணமாக 40 வயதில் கர்ப்பம் தரிக்கும் பெண்கள்
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:33:12

img

பிரான்ஸ் நாட்டில் அலுவலக வேலைக்காரணமாக பெண்கள் 40 வயதில் கர்ப்பம் அடைவது அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Insee என்ற ஏஜென்ஸி அண்மையில் பெண்களின் ஆரோக்கியம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில், 2015ம் ஆண்டில் பிறந்த ஒவ்வொரு 20 குழந்தைகளில் ஒரு குழந்தையின் தாயார் தனது 40 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் பிரான்ஸ் நாட்டில் 7,99,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களில் 5 சதவிகித தாயார்கள் 40 வயதுக்கு மேல் தான் கர்ப்பம் அடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 4 சதவிகிதமாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் பெண்கள் கர்ப்பம் தரிப்பது சராசரியாக 30.3 வயதாகும். ஆனால், தற்போது பிறப்பு விகிதம் 2.4 சதவிகிதம் வரை குறைந்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல், பிரான்ஸ் நாட்டில் 20-களில் பெண்கள் அலுவலக பணிக்கு செல்ல தயாராகி விடுவதால், அந்த வேலைப்பளுவை எதிர்க்கொள்ள முடியாமல் கர்ப்பம் தரிக்கும் வயதை தள்ளி போடுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 40 வயதிற்கு மேல் பெண்கள் கர்ப்பம் தரிப்பது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img