புதன் 14, நவம்பர் 2018  
img
img

திரைக்கு வரும் முன்பே இணையதளத்தில் வெளியான பிரபுதேவா படம்
புதன் 18 ஏப்ரல் 2018 14:02:41

img
திரைக்கு வரும் முன்பே பிரபுதேவா நடிப்பில் வெளியாகி இருக்கும் மெர்குரி படம் இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ், நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா உள்ளிட்ட முன்னணி நடிகர்-நடிகைகள் படங்கள் திரைக்கு வந்த அதே நாளில் திருட்டு இணையதளங்களில் வெளியாகி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள ‘மெர்குரி’ முழு படமும் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் திரைக்கு வருவதற்கு முன்பே திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
 
இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் செய்துள்ளார். இவர் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களை இயக்கி பிரபலமானவர். ரஜினிகாந்தின் புதிய படத்தையும் விரைவில் இயக்கம் செய்ய இருக்கிறார். மெர்குரி படத்தை வசனம் இல்லாத திகில் படமாக உருவாக்கி இருந்தார். ஏற்கனவே அறிவித்தபடி இந்த படம் பிற மாநிலங்களில் வெளியாகிவிட்டது.
 
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்தி வரும் போராட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் திரையிடுவதற்காக மெர்குரி படத்தை நிறுத்தி வைத்து இருந்தனர். ஆனால் படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியானது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
img
2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100

மேலும்
img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img