வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

நடிகை மேக்னா - கன்னட நடிகர் காதல் திருமணம்
புதன் 18 ஏப்ரல் 2018 13:57:43

img

‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மேக்னா, கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை   காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது.

‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மேக்னா. தொடர்ந்து ‘நந்தா நந்திதா’, ‘உயர்திரு 420’,   ‘கிருஷ்ண லீலை’ படங்களில் நடித்தார். இவர் முன்னாள் மலையாள நடிகை பிரமிளா ஜோஷி - கன்னட நடிகர் சுந்தர்   ஆகியோரின் மகள். மேக்னா மலையாளத்திலும், சில படங்களில் நடித்திருக்கிறார். என்றாலும், கன்னடத்தில்தான் ஏராளமான படங்களில் நடித்து பிசி நடிகை ஆனார்.

கன்னட படங்களில் இவருடன் நடித்த சிரஞ்சீவி சார்ஜாவுடன் நெருக்கமான பழக்கம்   ஏற்பட்டது. இவர் பிரபல கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் மகன்.   மேக்னா - சிரஞ்சீவி சார்ஜா இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, மேக்னா - சிரஞ்சீவி சார்ஜா நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இதில்,நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இவர்கள் திருமணம் வருகிற மே மாதம் 2-ந்   தேதி பெங்களூரில் நடக்கிறது.

 

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
img
கிளாமராக நடிக்க மாட்டேன் எம்பிரான் பட நாயகி - ராதிகா ப்ரீத்தி

தமிழில் வெளிவரவுள்ள எம்பிரான் படத்தை

மேலும்
img
எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான் - ஜான்வி

அம்மாவுக்கு என்றுமே சிறு குழந்தை தான்.

மேலும்
img
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்தி நடிக்கும் ஆக்‌ஷன் படம் - தேவ்!

புதிய இயக்குநர், ஆக்‌ஷன் படம், ரூ. 55 கோடி பட்ஜெட்,

மேலும்
img
தஞ்சாவூர் மக்களை நெகிழ்ச்சியடைய வைத்த ஓவியா

களவாணி 2, 90 எம்.எல், மற்றும் காஞ்சனா -3.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img