செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

எங்களுக்கும் இதே பிரச்னை உண்டு'- கொந்தளித்த காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்
செவ்வாய் 17 ஏப்ரல் 2018 13:39:15

img

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திலும் வன்கொடுமை பிரச்னைகள் உள்ளன. எனவே, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர்கள் கொந்தளித்தனர்.

காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைக்க  முயன்றது தொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயன்ற நிலையில், நேற்று கல்லூரி முன் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள், மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். மாதர் சங்க நிர்வாகி நிர்மலா ராணி, பெண்களைத் தவறாக வழி நடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி மீது வழக்கு பதிவு செய்யாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று உறுதியாகக் கூறியதால், கல்லூரி நிர்வாகம் சார்பில் அவர்மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, 3 பிரிவுகளின்கீழ் பேராசிரியை நிர்மலா தேவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சில மணி நேரம் கழித்து நிர்மலா தேவி யைக் கைதுசெய்த போலீஸார், உடனடியாக அவரை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்பாக பேராசிரியர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பேசிய பேராசிரியர்கள், ``பல்கலைக்கழகத்தின் சார்பாக நியமிக்கப்பட்ட 5 நபர் குழுவினர் மீதும் ஆளுநர் நியமித்த ஒரு நபர் கமிட்டி மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுவருபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். அதை உச்ச நீதிமன்றம் தலைமையிலான குழு விசாரணை செய்ய வேண்டும். தற்போதைய ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திலும் இந்தப் பிரச்னைகள் உள்ளன. எனவே, முழுமையான விசாரணை நடத்த வேண்டும்'' என்று கூறினர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img