புதன் 21, நவம்பர் 2018  
img
img

வைகோவின் மைத்துனர் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !
சனி 14 ஏப்ரல் 2018 18:02:00

img

விருதுநகரில் நேற்று தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி  மதுரை அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

விருதுநகரில் வசிக்கும் வைகோ மைத்துனர் மகன் சரவண சுரேஷ் நேற்று காலை பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். காவிரி பிரச்னைக்காக தற்கொலை முயற்சியை அவர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

90 சதவிகிதத்துக்கு மேல் தீக்காயத்துடன்  மோசமான நிலையில் மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் . இந்தத் தகவல் வைகோவை மிகவும் பாதிப்பு அடையச் செய்தது . அப்போலோ மருத்துவமனைக்கு உடனடியாக வந்த வைகோ, சரவண சுரேஷின் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து வைகோ கதறி அழுது தன் நிலையை விளக்கினார். தவறான மீம்ஸ் உள்ளிட்ட விஷ யங்களால் காயப்பட்டதாக வேதனை தெரிவித்தார்.  மேலும் `90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இனி அவர் பிழைப்பது கடினமே’ என்று தெரி வித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் மாலை 6  மணிக்கு மேல் அவரது  சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது .

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img