வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

நீண்ட இடைவேளைக்குப் பிறகு பார்த்திபனுடன் இணையும் பிரபுதேவா
வெள்ளி 13 ஏப்ரல் 2018 17:17:58

img
பார்த்திபன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘உள்ளே வெளியே-2’ படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபல நடிகர் பிரபுதேவா பார்த்திபனுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 
பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், ‘உள்ளே வெளியே’  படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் சமீபத்தில் அறிவித்தார். இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி இருப்பதாக முன்னதாக தகவல் வெளி யானது. இந்நிலையில், பிரபுதேவாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
பார்த்திபன் - பிரபுதேவா இருவரும் ஏற்கனவே `ஜேம்ஸ் பாண்டு', `சுயம்வரம்' உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு பார்த்திபன் - பிரபுதேவா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்கள் தவிர்த்து இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரபுதேவா தற்போது யங் மங் சங், லக்‌ஷ்மி, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
img
2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100

மேலும்
img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img