வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

சென்னையில் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ரத்து!
புதன் 11 ஏப்ரல் 2018 16:32:50

img

சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஐ.பி.எல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். நேற்று, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போட்டியின்போது, மைதானத்தின் உள்ளே செருப்பு வீசப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாகப்பட்டினம் மற்றும் கர்நாடகா, கேரளாவுக்கு போட்டிகள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது. அதுகுறித்து, பி.சி.சி.ஐ ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. முழு விவரங்களும் இன்று மாலையில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. தனியார் தொலைக்காட்சிக்கு ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா அளித்த பேட்டியில், 'ஐ.பி.எல் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img