சனி 16, பிப்ரவரி 2019  
img
img

மே அல்லது ஜூன் மாதத்தில் கிம் ஜோங் உன் உடன் டிரம்ப் சந்திப்பு
செவ்வாய் 10 ஏப்ரல் 2018 13:18:19

img

வாஷிங்டன்,

வரும் மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் வடகொரியா அதிபர் கிம்ஜோங் உன்-னை சந்திக்க உள்ளதாக  அமெரிக்க அதிபர் டொன்ல்டு டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இதற்கான ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க உளவு அதிகாரிகளும், வடகொரியா உளவு அதிகாரிகளும் மூன்றாவது நாடு ஒன்றில் பலமுறை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது, தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை குறைப்பது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக வடகொரியா அமெரிக்காவிடம் தெரிவித்து உள்ளது. இந்த தகவலை டிரம்ப் நிர்வாகம் உறுதி செய்து உள்ளது.

முன்னதாக, வடகொரியாவில் பயணம் மேற்கொண்ட பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசிய தென்கொரியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் ஈய்-யங், அணு ஆயுதம் குறைப்பு குறித்து விவாதிக்க வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் வருகிற மே மாதம் அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில் வட கொாிய அதிபா் கிம் ஜாங் உன்-னை சந்திக்க உள்ளதாக அமொிக்க அதிபா் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் தொிவித்துள்ளாா்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
img
நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 5 பேர் பலி 

கிழக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நிலக்கரி

மேலும்
img
மின் சிகரெட் வெடித்து ஆடவர் பலி 

சிகிச்சை பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம்

மேலும்
img
ஐ.எஸ் பயங்கரவாதிகள்  தோற்கடிக்கப்படுவார்கள் 

கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்

மேலும்
img
இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை  அறைந்த  பெண்ணுக்கு சிறை 

தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டாலர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img