img
img

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நடிகர் - நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு
திங்கள் 09 ஏப்ரல் 2018 12:49:11

img
நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு மீது புகார் தெரிவித்ததை அடுத்து புதிதாக இன்னொரு தெலுங்கு நடிகர் பற்றியும் பேஸ்புக் பக்கத்தில் பாலியல் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்-நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சுசிலீக்ஸ் பாணியில் தெலுங்கில் நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் உருவாக்கி இருக்கும் ஸ்ரீலீக்ஸ் நடிகர்கள், இயக்குனர்களின் அந்தரங்க விஷயங்களை அம்பலப்படுத்தி தெலுங்கு பட உலகை அதிர வைத்து வருகிறது.
 
இதில் தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு பெயர் வெளியானது. இவர் தமிழில் நயன்தாரா நடித்த ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும், தெலுங்கில் அனாமிகா பெயரிலும் வெளியான படத்தை இயக்கியவர். கொம்முலு வச்சின சேகருடு இயக்குனர் பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். நடிகைகளிடம் வாக்குறுதி அளித்து ஏமாற்றுகிறார் என்று சேகர் கம்முலுவை பற்றி ஸ்ரீரெட்டி குறிப்பிட்டு இருந்தார். இதற்கு சேகர் கம்முலு மறுப்பு தெரிவித்ததுடன் ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடரப்போவதாக எச்சரித்தார். அதற்கு பதிலடியாக ஸ்ரீரெட்டி சட்ட நடவடிக்கையை சந்திக்க தயார் அவரைப்பற்றிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று பதிலடி கொடுத்தார். 
 
இந்த நிலையில் புதிதாக இன்னொரு தெலுங்கு நடிகர் பற்றியும் முகநூல் பக்கத்தில் பாலியல் புகார் கூறியுள்ளார். அந்த நடிகர் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் இயல்பாக நடிக்க தெரிந்தவர். யாரையும் உணர்வுப்பூர்வமாக அணுகி சிக்க வைப்பார். மக்கள் முன் நாடகமாட தெரிந்தவர். மற்ற கதாநாயகர்கள் மகேஷ்பாபு, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரிடம் இருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தவறான நடத்தைகள் உள்ளவர். பல பெண்களை படுக்கையில் பயன்படுத்தி உள்ளார். ஒரு நாள் நிச்சயம் கடவுள் அவரை தண்டிப்பார். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். எந்த நடிகரை அவர் குற்றம் சாட்டி உள்ளார் என்று தெலுங்கு பட உலகில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 
பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் "ஐயங்கரன்" டீசர்

படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி

மேலும்
img
பில்லா பாண்டி விமர்சனம்

வெளிப்படுத்தி மடைதிறந்த வெள்ளம்

மேலும்
img
சர்கார் விமர்சனம்

காரணம் அவரது புத்திசாலித்தனத்தால்

மேலும்
img
2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100

மேலும்
img
அசுரவதம்  விமர்சனம்

மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img