(எஸ்.எஸ்.பரதன்)
தஞ்சோங்மாலிம், ஏப்.9- இங்குள்ள உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியல் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழித் துறையில் பட்டப் படிப்பினை முடித்த 52 ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கும் மேலாகியும் பணியிடக் கடிதங்கள் வராததால் மன உளைச்சலுடன் சிரமத்தையும் எதிர் நோக்கி வந்தனர். இந்நிலையில் கடந்த 2016இல் பட்டப் படிப்பினை முடித்த 22 ஆசிரியர்களும் 2017இல் பயிற்சியினை முடித்த 30 பேரில் 17 பேருக்கு கல்வி யமைச்சிடமிருந்து நேர்முகப் பேட்டிக்கு கடிதங்கள் கிடைக்கப்பெற்ற தமிழ்துறை பட்டதாரி ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாக அறிய வரு கிறது. ஒரு சில உப்சி தமிழ்துறை ஆசிரியர்கள் தங்களுக்கு ஆதரவாக, ஆசிரியர்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளை விடாது செய்திகளாக வெளியிட்டு வந்த நண்பன் நாளிதழுக்கு தொலைபேசி வாயிலாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.4.2018
சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்
மேலும்