வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

தஞ்சை அருகே ரெயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம்
சனி 07 ஏப்ரல் 2018 13:41:26

img
தஞ்சை
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், மாணவ அமைப்பினர், விவாசாயிகள் என அனைத்து தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள், சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இன்று காலை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தினர். தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி யதால் ரெயில் நிறுத்தப்பட்டது. அதேபோல் திருவாரூரில் விவசாயிகள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரு கின்றனர்.
 
தஞ்சை அருகே செங்கிட்டியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கைது. நாகையில் காவிரி வாரியம் கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் கடலில் இறங்கி போராட்டம்  நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில்  ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே மாவட்ட அளவில் கண்டன ஆர்ப்பா ட்டம்  300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலக்தை காவிரி உரிமை மீட்பு குழுவினர் பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம்; 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி செங்குன்றத்தில் தேமுதிகவினர் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்; மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img