செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

வாட்ஸ்அப்புக்கு சவால் கொடுக்கிறதா கூகுள் அலோ?
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:15:15

img

கூகுள் அலோ.. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் ஆப்களுக்கு சவால் அளிக்க வந்துள்ள, கூகுளின் புது ஆண்ட்ராய்டு சேவை. கூகுளின் எல்லா சேவைகளையும் இணைத்து, இந்த அலோ மெசெஞ்சரை உருவாக்கியுள்ளது கூகுள். எப்படி இருக்கிறது அலோ? உலகின் நம்பர் 1 மெசேஜிங் ஆப்பாக இருப்பதால், வாட்ஸ்அப் Vs அலோ ஒப்பீடுகளைத் தவிர்க்க முடியவில்லை. வாட்ஸ் அப் போலவே போன் நம்பர் கொடுத்துதான் 'அலோ' வைப் பயன்படுத்த முடியும். அத்துடன் நமது கூகுள் அக்கவுன்டைக் கொடுத்து, நமது பெயரைக் கொடுத்து அலோவைப் பயன்படுத்தத் துவங்கலாம். இரு நம்பர்களை ஒரே அக்கவுன்ட்டில் பயன்படுத்த முடியாது. ஒரே அக்கவுன்ட்டை வெவ்வேறு இரண்டு போன்களில் பயன்படுத்தவும் முடியாது. இதுவும் ஒரே மெசேஜிங் ஆப்தான் என்பதால், மற்றவைகளில் இருப்பது போன்ற வாய்ஸ் மெசேஜ், ஸ்டிக்கர்ஸ், இமேஜ், வீடியோ என எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் வாட்ஸ் அப் போன்ற வாய்ஸ் காலிங் வசதி இதில் இல்லை. டாக்குமென்ட்களையும் இதில் அனுப்ப முடியாது. இதில் உங்களுக்கு வரும் மெசேஜ்களுக்கு ஆப்பைத் திறக்காமலேயே பதிலளிக்க உங்களால் முடியும். நீங்கள் பதிலளிக்க விருப்பம் இல்லையென்றாலும் கூட, உங்களின் மெசேஜில் இருக்கும் கருத்தை வைத்து ஆராய்ந்து, உங்களுக்கு ரிப்ளை செய்வதற்கான பரிந்துரைகளையும் அலோ வழங்குகிறது. அதனை நீங்கள் செலெக்ட் செய்தால் போதும். அதுவே ரிப்ளை செய்துவிடும். இதனால் நீங்கள் மெசேஜை படித்து ரிப்ளை செய்ய டைப் செய்யக் கூடத் தேவையில்லை. அலோவின் ஹைலைட் கூகுள் அசிஸ்டன்ட்தான். ஹைக்கில் இருக்கும் நடாஷா போலவே, AI மூலமாக இயங்கும் இந்த கூகுள் அசிஸ்டன்ட்தான் அலோவை, மற்ற மெசேஜிங் ஆப்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த விர்ச்சுவல் அசிஸ்டன்ட் மூலம், உங்கள் அலோ ஆப்பிற்குள்ளேயே, பிரவுசரை திறக்காமல் விக்கிபீடியா பயன்படுத்த முடியும். உங்களுக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களை தேட முடியும். விமான, ரயில் நேரங்களை கண்டறிய முடியும். காலண்டர், மெயில், அலாரம் என பல விஷயங்களை இந்த அசிஸ்டன்ட் மூலமாகவே செயல்படுத்திக் கொள்ள முடியும். எந்த விஷயம் வேண்டுமோ, அதனை @google என டைப் செய்தால், போதும். பதிலுடன் ஆஜராகி விடுகிறது இந்த கூகுள் அசிஸ்டன்ட். அதாவது ஒட்டுமொத்த கூகுளையும், ஒரு சாட் அப்ளிகேஷனுக்குள் பொருத்தி இருக்கிறது கூகுள் நிறுவனம் .

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img