திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

மெக்சிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு
வியாழன் 05 ஏப்ரல் 2018 14:12:01

img

வாஷிங்டன்:

அமெரிக்காவை ஒட்டி தென் பகுதியில் மெக்சிகோ நாடு உள்ளது. இங்கிருந்து பல்லாயிரக்கணக்கானோர் எல்லை தாண்டி வந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இதனால் அமெரிக்காவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த ஊடுருவலை தடுப்பதற்காக ஏற்கனவே மொத்தம் உள்ள 3145 கிலோ மீட்டர் எல்லையில் சில பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மீதி உள்ள தூரத்துக்கு தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். இதற்கு மெக்சிகோ நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி தடுப்பு சுவர் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அதற்கு முன்னதாக எல்லை முழுவதும் ராணுவத்தை நிறுத்த அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். விரைவில் இதற்கான திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு எல்லை பாதுகாப்பு பணி ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதற்கும் மெக்சிகோ நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
பாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள் 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்

மேலும்
img
70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்  முதலிரவில் நகைகளுடன் ஓட்டம் 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா

மேலும்
img
கர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு

மேலும்
img
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை 

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்

மேலும்
img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img