ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

ரஷ்ய தூதரக அதிகாரிகள் 60 பேரை வெளியேற்றினோம்-அமெரிக்க அதிபர் டிரம்ப்
வியாழன் 05 ஏப்ரல் 2018 14:01:04

img

வாஷிங்டன்:

‘‘ரஷ்ய தூதரக அதிகாரிகள் 60 பேரை வெளியேற்றினோம். ரஷ்யாவிடம் என்னைவிட யாரும் கடுமையாக இருந்தது இல்லை’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இங்கிலாந்தில் ரஷ்யாவின் மாஜி உளவாளி ரசாயன விஷம் மூலம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐரோப்பிய நாடுகள் சில ரஷ்ய தூதர்களை வெளியேற்றின. இதற்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்காவும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 60 பேரை வெளியேற்றியது. அதே நேரம், வெள்ளை மாளிகை வரும்படி ரஷ்ய அதிபர் புடினுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், எஸ்டோனியா, லத்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய பால்டிக் நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை வாஷிங்டனில் நேற்று சந்தித்து பேசினர். பின்னர் டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது, ‘ரஷ்ய அதிபர் புடினை நீங்கள் நண்பராக கருதுகிறீர்களா அல்லது எதிரியாக நினைக்கிறீர்களா?’ என டிரம்பிடம் கேட்கப்பட்டது. இதற்கு டிரம்ப் அளித்த பதிலில் கூறியதாவது:

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உறவை மேம்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன். அதற்கான வாய்ப்புகளும் உள்ளது. நடக்காமலும் போக லாம். யாருக்கு தெரியும்?  ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவது நல்ல விஷயம்தான். சீனாவுடன் இணைந்து செயல்படுவதும் நல்ல விஷயம்தான். மற்ற நாடுகளுடனும் உறவை மேம்படுத்திக் கொள்வது கெட்ட விஷயம் அல்ல. எரிசக்தி துறையில் அமெரிக்கா தற்போது வலுவாக உள்ளது. எரிசக்தியில் சுயசார்புடன் இல்லாமல், நாங்கள் ஏற்றுமதியும் செய்கிறோம்.

இது ரஷ்யாவுக்கு நல்ல விஷயமல்ல. அமெரிக்க ராணுவத்துக்கு 700 பில்லியன் டாலர் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்தாண்டு 716 பில்லியன் டாலராக உயர்த்தப்படும். இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான ராணுவத்தை நாங்கள் பெறப்போகிறோம். இது நிச்சயம் ரஷ்யாவுக்கு நல்ல விஷ யமாக இருக்காது. நான் பல செயல்களை செய்துள்ளேன். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் எல்லாம் ரஷ்ய தூதரக அதிகாரிகள் நான்கு பேரை மட்டுமே வெளியேற்றின. நாங்கள் 60 பேரை வெளியேற்றினோம். என்னைவிட யாரும் ரஷ்யாவிடம் கடுமையாக இருந்ததில்லை. இவ்வாறு டிரம்ப் கூறினார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை சோதித்த வடகொரியா

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில்

மேலும்
img
அமெரிக்காவில் சிறுமி பலாத்காரம் இந்தியருக்கு வாழ்நாள் சிறை 

எப்.பி.ஐ. ஏஜெண்ட் தன்னை ஒரு சிறுமி

மேலும்
img
பாகிஸ்தானில் கனமழை 30 பேர் பலி

இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில்

மேலும்
img
பெருநாட்டின் முன்னாள் அதிபர்  தற்கொலை 

ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img