புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

யூடியூப் தலைமை அலுவலகத்தைப் பதறவைத்த பெண்..! அமெரிக்காவில் பரபரப்பு
புதன் 04 ஏப்ரல் 2018 12:16:34

img

யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமான யூடியூப், வீடியோ சேவைகளை வழங்கி வருகிறது. யூடியூப் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா அருகே உள்ள சான் ஃபருனோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இங்கு வந்த பெண் ஒருவர் திடீ ரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் யூடியூப் நிறுவன ஊழியர்கள் நிலைகுலைந்துப் போயினர். துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. எனினும் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது சமூக வலைதளமான யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கிச்  சூடு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள கூகுள் நிறுவன சி.இ.ஓ. `இன்று ஏற்பட்ட சோகத்தை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் ஊழியர்க ளுக்கு ஆதரவாக இருப்போம். போலீஸ் உட்பட உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
மூன்று மாத குழந்தைக்கு அடையாள அட்டை வழங்கி அனுமதித்த ஐநா...

முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ

மேலும்
img
கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாடு - ட்ரம்ப்பின் அடுத்த செக்!

அந்நாட்டில் குடியேறி புதிதாக கிரீன் கார்டு

மேலும்
img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img