வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

சந்திரபாபு நாயுடுவைச் சந்திக்கிறார் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
புதன் 04 ஏப்ரல் 2018 12:12:49

img

ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடுவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகினார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியடைந்த தெலுங்கு தேசம் கட்சித் தலை வரான சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையிலிருந்தும் தனது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை திரும்பப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், டெல்லி வந்துள்ள சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், அகாலி தளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோரைச் சந்தித்து பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்குமாறு அந்தத் தலைவர்களிடம் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திரபாபு நாயுடு இன்று சந்திக்கவுள்ளார். ஆந்திர பவனில் தங்கியிருக்கும் சந்திரபாபு நாயுடுவை கெஜ்ரிவால் சென்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img