செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி என்றாலும் எங்களுக்கு புதுச்சேரி விவசாயிகளே முக்கியம்
செவ்வாய் 03 ஏப்ரல் 2018 13:59:57

img

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர், வருகிற 5ம் திமுக நடத்தும் போராட்டத்திற்கு புதுச்சேரி காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். மேலும் மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பிரதமரை சந்தித்து கடிதம் அளித்ததாகவும் காவிரி நீர் கிடைக்காததால் காரைக்கால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.

இதனிடையே அவதூறு வழக்கு தொடர அனுமதி அளிக்க துணைநிலை கிரண்பேடி மறுத்ததால் கொறடா சார்பில் மனு தாக்கல் செய்ததாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசுக்கு எதிரான வழக்கு என்பதால் கிரண்பேடி கையெழுத்திடவில்லை என்று கூறினார். இதற்கிடையே புதுச்சேரி விவசாயிகளின் நலனே தங்களுக்கு முக்கியம் என்றும் புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய 7 tmc காவிரி நீரை பெறத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை  போராட்டம் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்த அவர், புதுச்சேரி விவசாயிகளுக்காகவும், மக்க ளுக்காகவும் எத்தகைய தியாகத்தையும் செய்ய தயார் என்று தெரிவித்தார். இறுதியாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி என்றாலும் எங்களுக்கு புதுச்சேரி விவசாயிகளே முக்கியம் என்று அம்மாநில முதல்வர் கூறியிருப்பது குறிப்பிடதக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img