திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

தமிழகத்தில் போராட்டம் எதிரொலி! பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு
செவ்வாய் 03 ஏப்ரல் 2018 13:06:57

img

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசியுள்ளார். தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரை அவர் சந்திக்க உள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆறு வார கால கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்கவில்லை. அதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. கடையடைப்பு, உண்ணாவிரதம், ரயில் மறியல் எனப் பல்வேறு போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடந்துவருகின்றன. இதேபோல, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், நியூட்டிரினோவுக்கு எதிராகவும், ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இதனால், தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதற்கிடையே, இரண்டு தினங்களுக்கு முன்னர் போராட்ட நிலைமை குறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பிரதமர் மோடியை ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித் சந்தித்துப் பேசியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமரைச் சந்திக்கும் அவர், காவிரிக்காக தமிழகத்தில் நடந்துவரும் போராட்ட நிலைகுறித்துப் பேசிவருகிறார். அடுத்து அவர், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்செய்வார் என்று தெரிகிறது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி

மேலும்
img
ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்

மேலும்
img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img