திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

அரசியலில் அடுத்த அதிரடி... சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி
வெள்ளி 30 மார்ச் 2018 13:25:26

img

அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக எதிர்க்கட்சிகளின் ஆதரவை மேலும் அதிகரிக்க, சென்னை வருகிறார் மம்தா பானர்ஜி.

வட மாநிலங்களில் பா.ஜ.க-வின் கை மேலோங்கியிருப்பதால், அதை மாற்றியமைக்க மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி யின்  தலைவருமான மம்தா பானர்ஜி, மிகத் தீவிரமான முயற்சியில் ஈடுப்பட்டுவருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அளவில் பா.ஜ.க-வை வீழ்த்துவதையே இவர் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளார். இதனால், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான கட்சியாக மாற இவர் பல பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சிக்கும், அவர்கள் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கொண்டுவர இருந்த நம்பிக்கையில்லாத்  தீர்மானத்துக்கும் மம்தா ஆதரவு அளித்தார். பின்னர், டெல்லி சென்ற மம்தா அங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தி.மு.க எம்.பி., கனிமொழி, சிவசேனா கட்சியின் எம்.பி., சஞ்சய் ராவத் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, பா.ஜ.க-வின் அதிருப்தி தலைவர்களைச் சந்தித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அரசியலில் அடுத்தகட்ட நகர்வாக, இரண்டு நாள் பயணமாக சென்னை வரவுள்ளார் மம்தா பானர்ஜி. ஏப்ரல் மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் வர இருக்கி றார். சென்னை வரும் இவர், தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பார். மேலும் தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலி னுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி

மேலும்
img
ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் கட்சிதான் - ரவிசங்கர் பிரசாத்

இந்தியாவின் எதிரிகளுக்கு மட்டுமே ராகுல்

மேலும்
img
அமைச்சர் தங்கமணி மீது நான் வழக்கு தொடர்வேன்!’ மு.க.ஸ்டாலின் பேட்டி

ஆனால், நேற்று இரவு இதோ என் கையில்

மேலும்
img
இந்துக்களின் எண்ணிக்கை குறைவதுபற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஏன் கவலைப்படவேண்டும்? கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பான ஆரிய பார்ப்பனிய

மேலும்
img
100 ரூபாய் சம்பளம்... எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே கார், வீடு... - கலைஞர் குறித்து கரு.பழனியப்பன்

முதல்வர்களாக இருந்தவர்களில் கலைஞர் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img