வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

வெடித்துச் சிதறிய விமான டயர்! நடிகை ரோஜா உட்பட 72 பேர் உயிர் தப்பினர்
வியாழன் 29 மார்ச் 2018 13:43:32

img

ஹைதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கியபோது, தீடிர்ரென டயர் வெடித்துச் சிதறியது. எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் நடிகை ரோஜா உள்ளிட்ட 72 பயணிகள் உயிர் தப்பினர். 

நேற்று இரவு திருப்பதியில் இருந்து ஹைதராபாத்கு இண்டிகோ விமானம் இரவு 8.55 மணி அளவில் புறப்பட்டது. இந்த விமானத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ நடிகை ரோஜா உட்பட 72 பயணிகள் பயணித்தனர். இந்த விமானம் இரவு 10.25 மணிக்கு, ஹைதராபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, விமானத்தின் ஒரு டயர் திடீரென தீ பிடித்து வெடித்தது சிதறியது. அதனால், விமானத்தில் இருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். 

விமானத்தின் டயர் வெடித்துத் தீ பிடித்ததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொண்டனர். தீ அணைக்க ப்பட்டபின் பயணிகள் பத்திரமாக கீழே இறங்கினர். விமானத்தின் டயர் வெடித்ததால் ஓடுதளம் மூடப்பட்டு, ஹைதராபாத் சென்ற 6 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. 

இந்த விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை ரோஜா, சகப் பயணிகளுடன் உயிர் தப்பிய தருணத்தை வீடியோ காட்சியாகப் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்

மேலும்
img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img