செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

மிளகாய் பயிரீட்டில் மோசடி
வியாழன் 29 செப்டம்பர் 2016 17:20:54

img

மிளகாய்ப் பயிரீட்டு வர்த்தக நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட முதலீட்டு பணத்தை திரும்பப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட நால்வர் போலீசில் புகார் செய்துள்ளனர். நேற்று இங்குள்ள ஜசெக தலைமையகத்தில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி சிவ சுப்பிரமணியம் தலைமையில் பாதிக்கப்பட்ட நால்வரும் செய்தி யாளர்களைச் சந்தித்து விவரங்களை தெரிவித்தனர். கடந்த 2015 மார்ச் 24ஆம் தேதி மிளகாய் பயிரீட்டு வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு கவரப்பட்டோம். ஏற்கெனவே நாங்கள் ஓர் அறவாரியத்தின் மூலம் பயிற்சிகள் பெற்றிருந்ததால் அந்த பயிற்சியின் போது இத்திட்டத்தில் பங்கேற்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று எங்களை முதலீடு செய்ய கவர்ந்தது. குறிப்பிட்ட அந்த அற வாரியத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் போல இந்நிறுவனம் தன்னை காட்டிக் கொண்டதால் அதன் அடிப்படையில் கணிசமான தொகையை முதலீடு செய்தோம். ஆரம்பத்தில் ஒரு நிலத்தை அடையாளம் காட்டி இதில்தான் மிளகாய் பயிரிடப்படவிருக்கிறது. இந்நிலத்திற்கான மாத வாடகை உட்பட மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளை மேம்படுத்த முதலீட்டு நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்கள் சம்பந்தப்பட்ட அந்நிறுவனத்தினர். நாங்களும் இதை நம்பி முதலீடு செய்தோம். வருடம் ஒன்றானது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தொடக்கத்தில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்படாததால் அந்நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்து, முதலீட்டு நிதியை திரும்பப் பெறுவதற்கு முயன்றோம். ஆனால் எங்களுக்கு சரியான பதில் கூற அந்நிறுவனம் முன்வரவில்லை என்று பாதிக்கப்பட்ட கணேஷ் லட்சுமணன், பழனிவேல் ராமலிங்கம், அப்துல் ரஷ்தாஜுரிடின், தனம் முனுசாமி தெரிவித்தனர். இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி சிவ சுப்பிரமணியம் இந்நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் பேரா மந்திரிபுசார் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரியாகவும் தனது செயல் நடவடிக்கைகளை அதே அலுவலகத்தில் மேற்கொண்டிருப்பதால் இவர்கள் முதலீட்டாளர்களை கவர்வதற்கு செயல்பட்டுள்ளார்கள் என்று கூறினார். குறிப்பிட்ட அந்த அறவாரியத்தின் நடவடிக்கை குறித்து பலமுறை பேரா சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பியும் அதற்கு பதில் கூற பேரா மந்திரி புசார் மறுத்து விட்ட நிலையில், அந்த அறவாரியத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு தனியார் நிறுவனம் சிலரிடம் முதலீட்டு தொகையை வசூல் செய்திருப்பது குறித்து கண்டனம் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img