செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

தியான் சுவாவிற்கு 3 மாதச் சிறை!
வியாழன் 29 செப்டம்பர் 2016 17:18:56

img

13ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆற்றிய உரையின்போது தேச நிந்தனை சொற்களை பயன்படுத்தியதற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவிற்கு மூன்று மாதச் சிறைத் தண்டனையும் 1,800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டன. ஓராண்டுக்கும் குறைவான சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளிக்கும் குறைவான அபராதமும் விதிக்கப்பட்டதால், தியான் சுவா தனது நாடாளுமன்ற பதவியை தக்க வைத்துக் கொண்டார். ஓராண்டுக்கும் கூடுதலான சிறைத் தண்டனையும் 2,000 வெள்ளிக்கும் கூடுதலான அபராதமும் விதிக்கப்பட்டிருந்தால் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து இருப்பார். பிகேஆர் உதவித் தலைவருமான தியான் சுவாவிற்கு எதிரான குற்றச்சாட்டை அரசாங்கத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இருப்பதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஸுல்கர்னாயின் ஹசான் தீர்ப்பளித்தார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் உள்நோக்கத்துடன் தியான் சுவா தேச நிந்தனை வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பதாக அவர் மேலும் கூறினார். சுவா சார்பில் பிகேஆர் வழக்கறிஞர்கள் என்.சுரேந்திரனும் லத்தீபா கோயாவும் ஆஜராகினர். அரசாங்கத் தரப்பில் டிபிபி ஜுலியா இப்ராஹிம் வாதாடினார். தேச நிந்தனைச் சொற்களைப் பயன்படுத்தியதாக 2013 மே 29ஆம் தேதி தேச நிந்தனைச் சட்டத்தின் 4 (1)(6) பிரிவின் கீழ் சுவா குற்றஞ்சாட்டப்பட்டார். 2013 பொதுத் தேர்தல் முடி வடைந்தவுடன் அவர் கோலாலம்பூர் சீனர் அசெம்பிளி ஹாலில் உரையாற்றியபோது இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக கூறப்பட்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img