img
img

உலகம் ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள் உயிரிழப்பு
சனி 24 மார்ச் 2018 16:22:12

img

சிட்னி : ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் 150 திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது வனவிலங்கு நல ஆர்வ லர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற மருத்துவம் மற்றும் தன்னார்வ குழுவினர் அவற்றை மீட்டனர். 

பெர்த் நகரையொட்டிய ‘ஹேமலின் பே’ கடற்கரையில் நூற்றுக்கணக்கான பைலட் வகை திமிங்கலங்கள் நேற்று காலை கரை ஒதுங்கியிருப்பதை மீன வர்கள் கண்டனர். இது குறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த வன விலங்குகள் துறை அதிகாரிகள், திமிங்கலங்களை மீண்டும் கட லுக்குள் கொண்டு விடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.ஆனால் அதில் 5 திமிங்கலங்கள் மட்டுமே காப்பாற்ற முடிந்ததாக மருத்துவ குழு தெரி வித்துள்ளது. 

பின்னர் அவற்றைக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு விடப்பட்டன. உயிரிழந்த திமிங்கலங்கள் அதிகபட்சமாக 16 அடி வரை  உள்ளதாகவும் ஆழ்கடலில் இருந்து பாறை நிறைந்த பகுதிகளுக்கு வந்ததால் அவை உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரை ஒதுங்குவது ஏன்?

‘ஹேப்’ எனப்படும் ஒரு வகை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் திமிங்கலங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கும். அதுதவிர, இரை தேடி முன்னே செல்லும் திமிங்கிலம் வழி தவறி விடுமானால், அதைப் பின்பற்றிச் செல்லும் திமிங்கிலங்களும் வழி தவறி கரை ஒதுங்கும் என்கின்றனர் கடல் ஆராய்ச்சியாளர்கள்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வடகொரியாவில் அடுத்த வாரம்  புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்

மேலும்
img
உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு  சீனா வெற்றிகர சோதனை!

8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்

மேலும்
img
மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது

இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்

மேலும்
img
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை

மேலும்
img
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img