ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

'இந்த முடிவு எனக்குப் பயத்தை உண்டாக்கியது'- சந்திரபாயு நாயுடுக்கு அமித் ஷா திடீர் கடிதம்
சனி 24 மார்ச் 2018 15:54:24

img

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி பிரிந்து சென்றது துரதிருஷ்டமானது என்றும் இந்த முடிவு ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்டுள்ளது எனப் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

இது குறித்து சந்திர பாபுநாயுடுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், `ஆந்திர மக்களுக்கு எனது யுஹாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கி றேன். நீண்ட காலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அங்கம் வகித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி, பிரிந்து சென்றது துரதிருஷ்டமானது. மேலும், இந்த முடிவானது ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை. இந்த முடிவு எனக்குப் பயத்தை உண்டாக்குகிறது. மாநிலங்களே முதன்மையானது என்ற அடிப்படையில், மாநில மக்களின் நலன் கருதி செயல்படுவர் பிரதமர். 

ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதுபோல், அரசியலைப் புரிந்துகொண்டு, அதனை நிதானமாக வழிநடத்தவேண்டும். மேலும், அனைவரையும் மேன்மை அடையச் செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ.க அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின், நீண்டநாள் கோரிக்கையான ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதிக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை, 2018-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறவில்லை என்ற காரணத்தினால் பா.ஜ.க-வுடன் கடந்த 7-ம் தேதி அன்று கூட்ட ணியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.  

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img