வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

`லஞ்சத்துக்கு நாய் மாதிரி ஏன் அலையிறீங்க' - நடுரோட்டில் போக்குவரத்து போலீஸை கலங்கடித்த வாலிபர்கள்
வியாழன் 22 மார்ச் 2018 15:52:55

img

சென்னை வேளச்சேரி 200 அடி சாலையில் போக்குவரத்து போலீஸாருடன் இளைஞர்கள் சிலர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. 
 
சமூக வலைதளத்தில் போக்குவரத்து போலீஸாருடன் இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகிவருகிறது. சினிமாவில் வரும்காட்சிகளைப் போல போக்குவரத்து போலீஸாரின் கைகளை மடக்கிப்பிடிக்கிறார் ஓர் இளைஞர். இளைஞரிடம் சிக்கிய போலீஸாரை, சக போலீஸார் மீட்கின்றனர். அடுத்து, போக்குவரத்து போலீஸாரிடம் இளைஞர்கள் தகராறு செய்கின்றனர். அந்த வீடியோவில், `போலீஸாரிடம் தகராறு செய்பவர்கள், எதற்கு நீங்கள் அடிக்கிறீர்கள், சம்பளம் வாங்கும் நீங்கள் எதற்காக லஞ்சம் வாங்குகிறீர்கள், லஞ்சம் வாங்க ஏன் நாய் மாதிரி அலைகிறீர்கள் என்று பேசும் ஆடியோ தெளிவாகக் கேட்கிறது. அதற்கு, போலீஸார், கலைந்து செல்லுங்கள்' என்று சொல்கின்றனர்.

இதுகுறித்து கூடுதல் கமிஷனர் (போக்குவரத்து) அருணிடம் கேட்டதற்கு, ``அந்த வீடியோவில் உள்ள இளைஞர்களில் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் அந்தப் பகுதியில் சென்றுள்ளார். இதைப்பார்த்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், அந்த இளைஞருக்கு அபராதம் விதித்துள்ளார். அந்த ரசீதை இளைஞர் கிழித்தெறிந்ததோடு தேவையில்லாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர்களை போலீஸார் சமரசப்படுத்தியபோதும் இளைஞர்களில் சிலர் அநாகரிகமாக நடந்துள்ளனர். மேலும், நடந்த சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து போலீஸாருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. விசார ணைக்குப் பிறகு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img