திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

நான்காவது முறையாக ரஷ்ய அதிபரானார்! எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் புதின்!
திங்கள் 19 மார்ச் 2018 16:02:39

img

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று நான்காவது முறையாக அதிபரானார் விளாடிமிர் புதின்.

ரஷ்யாவின் அதிபர் தேர்தல் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் கடந்த 2000 ஆண்டு முதல் அதிபராகவும், பிரதமராகவும் விளாடிமிர் புதின் உள்ளார். தற்போது இவரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமாக வாக்க ளித்தனர். வாக்கு பதிவு முடிவடைந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.பதிவான மொத்த வாக்குகளின் 76% வாக்குகளைப் பெற்று விளா டிமிர் புதின் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம்  வரும் 2024-ம் ஆண்டு வரை அவரே அதிபர் பதவியில் நீடிப்பார். ரஷ்ய கூட்டமைப்பு கம்யூ னிஸ்ட் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட பவெல் குரூடின் 12% வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். 76% வாக்குகள் பெற்றதால் எதிர்க்கட்சி களே இல்லாமல் புதின் அசைக்க முடியாத  வெற்றியை பெற்றுள்ளார்.

வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதின், கடந்த 5 ஆண்டுகளில் ரஷ்யாவின் முன்னேற்றத்திற்கு நாம் உழைத்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றி எனக் கூறினார். மேலும் மற்ற உலகத் தலைவர்களும் இவரின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாடு - ட்ரம்ப்பின் அடுத்த செக்!

அந்நாட்டில் குடியேறி புதிதாக கிரீன் கார்டு

மேலும்
img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img