செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

தோனி படத்தை பாகிஸ்தானில் வெளியிடாதது ஏன்?
வியாழன் 29 செப்டம்பர் 2016 16:45:48

img

இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. ஹிந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் ஃபாவத் கான், மஹிரா கான் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். மும்பையில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வரும் அவர்களுக்கு, 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சியின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் மனைவி ஷாலினி தாக்கரே மற்றும் நிர்வாகிகளில் ஒருவரான ஏமி கோப்கர் ஆகியோர், 'பாகிஸ்தான் நடிகர்கள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையே அவர்களே வெளியேற்றும்' என்றனர். இதனையொட்டி, தோனி படம் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு வெளியாக அனுமதி மறுப்பு என்றும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அந்நாட்டு தணிக்கைக் குழுவின் தலைவர் மொபாஷிர் ஹாசன் கூறும்போது: பாகிஸ்தானில் தோனி படம் தொடர்பாக தணிக்கைக் குழுவின் அனுமதி வேண்டி இதுவரை எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை. எங்களிடம் வராத ஒரு படத்தை நாங்கள் எப்படி தடை செய்யமுடியும்? என்றார். இந்நிலையில் தோனி படத்தை பாகிஸ்தானில் வெளியிடுவதாக இருந்த ஐஎம்ஜிசி என்டர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர் சபினா இஸ்லாம் இந்த விவகாரம் குறித்து கூறும்போது: இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சூழலில், தோனி படத்தை வெளியிட நாங்கள் விரும்பவில்லை. தோனி, இந்தியாவின் ஹீரோ. அதனால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img