வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

`சிரியா மண்ணே சிரி' - வைரமுத்து கண்டனம்!
சனி 03 மார்ச் 2018 15:45:41

img

உலக நாடுகள் அதிரும்வண்ணம், கடந்த வாரம் நடந்தேறிய சிரியா தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற போரின் உச்சமாக, இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் உலக நாடுகளை அதிரவைத்தன. தாக்குதலுக்கு உள்ளான பிஞ்சுக் குழந்தைகளின் அழுகுரல்கள் உலக மக்களின் வலியாக உணரப்படுகிறது. 'கிளர்ச்சியாளர்க ளின் பிடியிலிருக்கும் கிழக்குக் கௌட்டாவில், தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்யப்படும்' என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தர விட்டார். இருப்பினும், இந்த உத்தரவு பெயரளவே என்பது மேலும் வருத்தமளிக்கக்கூடிய செய்திதான். இதனால், சிரியா அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. பல்வேறு உலக நாடுகளும் இதுகுறித்து கண்டனங்களைப் பதிவிட்டுவருகின்றன. தமிழகத்திலும் தாக்குதலுக்கு எதிராகக் குரல்கள் ஓங்கி ஒலித்துவருகின்றன.

இதற்கிடையே, சிரியா தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். 'சிரியா மண்ணே சிரி' என்ற பெயரில் அவர் கவிதை வெளியிட்டுள்ளார். அதில், "மழை அறியாத சிரியா மண்ணில் ரத்தத்துளி சொட்டுகிறது. கரும்புகை தற்போது சிரி யாவை ஆண்டுவருகிறது. குழந்தைகளைப் பதுங்குக் குழியில் வைத்துப் பாதுகாக்கும் நிலைக்குத் தாய்மார்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள், பதுங்குக் குழிகளில் வீழ்ந்துள்ளன. ரசாயனத் தாக்குதலால் கழுகுகளைக்கூட விட்டுவைக்கவில்லை. வீடுகள், கான்கிரீட் கல்லறைகளாக மாறியுள்ளன. போரும் மரணமும் எந்த வடிவிலும் அழகில்லை" என்று கூறியுள்ளார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img