திங்கள் 22, ஏப்ரல் 2019  
img
img

அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் மனோநிலையில் மாற்றம் வேண்டும்
செவ்வாய் 23 ஜனவரி 2018 13:26:51

img

கோலாலம்பூர், 

நாட்டின் தலைநகர் கோலாலம்பூர், ஒரு காலத்தில் புறம் போக்கு குடிசை வீடுகளால் சூழ்ந்திருந்த போது அடிப்படை வசதியின்றி, மக்கள் அவதிக்கு ள்ளான துடன், அதிகமான சமூகப்பிரச்சினைகளுக்கு வித்திடும் கூடாரமாகவும் அவை விளங்கியிருந்தன. 2000 ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா மா நகரை காண வேண்டும் என்ற அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், அன்றைய மாநகர் மன்றத் தலைவர் டான்ஸ்ரீ அலியாஸ் ஒமார் தீட்டிய பெருந்திட்டத்தின் விளைவாக, குடிசை வீடுகளிலிருந்து தலைநகர் விடுபட்டு, அவை வீற்றிருந்த இடங்கள் தற்போது பி.பி.ஆர். என்று சொல்லக்கூடிய குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கான மாநகர் மன்றத்தின் வாடகை அடுக்குமாடி வீடுகளாக  வானுயர காட்சி தருகின்றன.

மாநகரின் மையப்பகுதியில் கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பங்சார், பந்தாய் டாலாம் பகுதியில் உயர்ந்து காணப்படும்  21 மாடிகளை கொண்ட பி.பி.ஆர். அடுக்குமாடி  வீடுகளில் குடியேற்றப்பட்டவர்களில் 85 விழுக்காட்டினர், குடிசைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆவர்.   குடிநீர், மின்சாரம், சாலை, தெரு விளக்கு, விளையாட்டு மையம், குப்பைத் தொட்டி கொட்டகை போன்ற வசதிகள் அன்று இல்லை. ஆனால், இன்று பி.பி.ஆர். அடுக்குமாடி வீட்டுப்ப குதிகளில் அத்தனை வசதிகளும் உள்ளன. குடியிருப்பாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்குகூட போதுமான இடங்கள் ஒதுக்கி தரப்பட்டுள்ளன. வீடமைப்புப் பகுதி அருகிலேயே பொது போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Read More: Malaysia Nanban Tamil Daily on 23.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img