புதன் 14, நவம்பர் 2018  
img
img

பந்திங் - கிள்ளான் சாலை மரண சாலையாக மாறும் அபாயம்
திங்கள் 22 ஜனவரி 2018 13:03:26

img

பந்திங், 

கோலலங்காட் வாழ் மக்களுக்கு பிரதான சாலையாக விளங்கிவரும் பந்திங் - கிள்ளான் சாலை மட்டுமல்லாது இவ்வட்டாரத்தில் உள்ள பல சாலைகள் வாகனமோட்டிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மிக மோசமான குண்டும் குழியுமாக இருந்து வருவது குறித்து இவ்வட்டார மக்கள் தங்களின் ஆட்சேபத் தையும் அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.

இங்குள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளால் குறிப்பாக இரு சக்கர மோட்டார் வண்டிகளை பயன்படுத்து வோரின் உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கும் சேதமுற்றுள்ளதை சம்பந்தப்பட்ட தரப்பினர் கண்டும் காணாததுபோல் இருப்பதன் காரணம் புரியவில்லையென தினமும் பந்திங் - கிள்ளான் சாலையை  பயன்படுத்தி வருவோரான கோ.ரகு, க.வினோத்ராஜ், பெ.அழகேந்திரன், மூர்த்தி, ஆ.கும ரேசன், முனியன் ஆகியோர்  அதிருப்தி தெரி வித்தனர்.

தற்போது மழை காலமாக இருந்து வருவதனால் சாலைகளில் மழைநீர் நிரம்பும் வேளை எங்கு குழிகள் இருக்கிறது என தெரியாத நிலையில் வாக னங்களை செலுத்தும்போது பேராபத்தில் சிக்க நேரிடுகிறது. குறிப்பாக சாலைகளில் காணப்படும் குழிகளினால் வாகனங்களின் கீழ் பகுதி கடுமையாக சேதமுறுவதுடன் பலர் கீழே விழுந்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டு வருவதாக இப்பகுதியைச் சேர்ந்த இ.முனுசாமி, ஏ.முத்துவேல், பா.சோமசுந்தரம், டாக்சி யோட்டியான மோகன், பரமசிவம், ரா. பரமசிவம், மு.ராஜசேகரன் ஆகியோர்  வேதனை தெரிவித்தனர்.

Read more: Malaysia Nanban Tamil Daily on 22.1.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img