செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
வியாழன் 18 ஜனவரி 2018 12:08:04

img

கோலாலம்பூர்,

2012 ஆம் ஆண்டு அரசாங்கத்தின்  சிறப்புத்திட்டத்தின் வழி (Pakej Rangsangan Khas 2012) தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி துணை அமைச்சர் டத்தோ பி. கமலநாதனுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் நல்லதொரு சூழலில், சௌகரியமாக மேற்கண்ட பள்ளிகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய தேவையான நடவடிக் கையை உடனடியாக எடுக்குமாறு கமலநாதனை பிரதமர் பணித் துள்ளார்.

2012 ஆம் ஆண்டு அரசாங்கத்தின்  சிறப்புத் திட்டத்தின் கீழ் (Pakej Rangsangan Khas 2012)   100 மில்லியன்  வெள்ளி செலவில் 39 தமிழ்ப்பள்ளி களுக் கான புதிய கட்டடங்களையும் 19  தமிழ்ப் பள்ளிகளுக் கான 18 கூடுதல் வகுப்பறைகளையும் கட்டுவதற்கு  அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த 39 பள்ளிகளில் 37 பள்ளிகள் இதுவரையில் பூர்த்தியாகாம லும், கட்டுமானத்திற்கு நிர்ணயிக் கப்பட்ட கால கட்டத்தையும் தாண்டி இன்னும் பூர்த்தியாகாமல் இருந்து வருவதை மலேசிய நண்பன் அண்மைய சில தினங்களாக முதல் பக்கத்தில் சுட்டிக்காட்டி வந்துள் ளது.

இப்பள்ளிகளின் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப் படாததால் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள்  புதிய கல்வி ஆண்டில் நல்லதொரு கற்றல் - கற்பித்தல் சூழலில் கல்வியை தொடர முடியாமல், இன்னமும் பழைய கட்டடத்திலேயே இருந்து வருவது குறித்து மலேசிய நண்பன் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டி வருகிறது.

Read More: Malaysia Nanban News Paper on 18.1.2018 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img