செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை.
புதன் 17 ஜனவரி 2018 12:34:58

img

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை அவரின் ரசிகர்களும் மக்களும் தொண்டர்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை. 

அந்த நாள் அவருக்கு பரவசமான நாளாகவும் இருந்ததில்லை என்பது தான் உண்மை. அவரோடு இருந்த மக்களுக்கே அது மிகப்பெரிய வியப்பைக் கொடுத்தது. ஒரு முறை அவரிடம் வெளிப்படை யாகவே கேட்டு விட்டார்கள். பிறந்த நாள் தான் ஒரு மனி தனுக்கு மிகப்பெரிய மலர்ச்சி யைக் கொடுக்க வேண்டிய நாள். சந்தோசமா இருக்க வேண்டிய நாள். நீங்க மட்டும் இந்த நாளில் மௌனமாகவும், கொஞ்சம் கவலையாகவுமே இருக்கிறீர்களே ஏன்? என்றனர். அதற்கு எம்.ஜி.ஆர் சொன்ன பதில் மெய் சிலிர்க்க வைக்கிறது.

நான் பிறந்த நாள் ஏன் கொண்டாடறதில்லைன்னு கேக்கறீங்க. கொஞ்சம் யோசிச்சு பாருங்க,  இந்த நாளில் தானே என்னைப் பெற்றெடுக்க என் அம்மா கதறியிருப்பார். இந்த நாளில் தானே அவர் வலியால் துடியாய்த் துடித்திருப்பார். என் அம்மாவின் பிரசவ வலிதான் இந்த நாள் முழுவதும் எனது கண் களிலும் மனதிலும் இருக்கிறது. இந்த நாளைக் கொண்டாடவேண்டும் என நினைக்கும் போதெல்லாம் எனக்குக் கூசுகிறது. மிகப்பெரிய தயக்கம் வருகிறது. என் அம்மா வலியால் துடித்த நாளை நான் கொண்டாடுவது நியாயமா என்ன ? என்றார்.

Read more: Malaysia Nanban News Paper on 17.1.2018

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img