வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

கணவரின் மரணச் சான்றிதழை வழங்காமல் இழுத்தடிப்பு
செவ்வாய் 16 ஜனவரி 2018 16:52:15

img

(பி.ஏ.கந்தையா) ஊத்தான் மெலிந்தாங், 

கெப்பாக் என்னும் சிப்பிகளைச் சேகரிக்கச் சென்ற தன் கணவர் கடலில் மூழ்கி காணாமல் போய் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் அவரின் மரணச் சான்றி தழை வழங்காமல் தேசிய பதிவிலாகா இழுத்தடிப்பதாக கணவரை இழந்து தவித்துவரும் மாது ஒருவர் தேசிய பதிவிலாகா விற்கு எதிராகப் புகார் தெரி வித்தார்.

இங்குள்ள ஜாலான் ஊத்தான்  மெலிந்தாங் பத்தாவது மைல் கம்போங் ஜெண்டராட்டாவில் வாடகை வீடு ஒன்றில் வசித்துவரும் சன்னாசியம்மா அப்பண்ணா (வயது 44) என்பவரின் கணவர் ஹொங் ஹோக் சுவான் (வயது 51) என்பவர் கடந்த 5-3-2016ஆம் ஆண்டில் காலை 11 மணியளவில் பாகான் டத்தோ பெத்திங் பெராஸ் பாஷா என்னும் இடத்தில் கடலில் மூழ்கி கெப்பாக் என்னும் சிப்பிகளை சக நண்பர்களுடன் பிடித்துக் கொண்டிருந்தவர் திடீ ரென கடலில் மூழ்கி மாயமானார்.

அவரின் சக நண்பர்கள் மீன்பிடி படகு மூலமும் நீரில் மூழ்கி எங்கு தேடியும் அவரோ, அவரின் சடலமோ கிடைக்கவில்லை. சக மீனவர்களும் தீய ணைப்புப் படைவீரர்களும் கடற் போலீசாரும் 10 நாட்கள் தேடியும் சடலம் கிடைக்காததால் தேடும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

Read More: Malaysia Nanban News Paper on 16.1.2017

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img